×

கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு ஊராட்சி செயலர்களிடம் தனித்தனியாக விசாரணை

வேலூர், மார்ச் 4: கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அந்த ஒன்றியத்தில் நடந்த பணிகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடந்த சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் திட்டப்பணிகள், கல்வெர்ட் பணி, கழிவுநீர் கால்வாய் வசதி, பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டம், தனிநபர் கழிவறை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் உட்பட பல்வேறு திட்டப்பணிகளின் நிலை குறித்தும் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாத துவக்கத்தில் வேலூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஒன்றியத்துக்குள் அடங்கிய ஒவ்வொரு ஊராட்சியிலும் நடந்த பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட பதிவேடுகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதைதொடர்ந்து அணைக்கட்டு ஒன்றியத்தில் 2 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நேற்று கணியம்பாடி ஒன்றியத்தில் நடந்த திட்டப்பணிகள் குறித்த ஆய்ைவ ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு ஊராட்சி செயலரையும் தனித்தனியாக அழைத்து பணி பதிவேடுகளை ஆய்வு செய்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும், நடந்து வரும் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார். அதேபோல் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் தொடர்பான பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திட்ட இயக்குனர் மாலதி, வேலூர் தாசில்தார் சரவணமுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அசோக், பிடிஓக்கள் திருமால், ஜெய, யுவராஜ் ஆகியோர் இருந்தனர்.

Tags : office ,Collector's Action Inspection ,Ganiyambadi PDO ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...